search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாய் தற்கொலை"

    • சீனிவாசன் மதுபோதையில் வீட்டுக்கு வந்தார். இதனால் கணவன் -மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
    • தற்கொலை குறித்து வெள்ளவேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    பூந்தமல்லி அடுத்த கொத்தியம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி அமுதா (40). இவரது 2 மகன்களை கடந்த சில நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கு தொடர்பாக வெள்ளவேடு போலீசார் கைது செய்தனர்.

    இதற்கிடையே சீனிவாசன் மதுபோதையில் வீட்டுக்கு வந்தார். இதனால் கணவன் -மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. மகன்கள் கைது செய்யப்பட்டு உள்ள நிலையில் கணவரும் மதுகுடித்து வந்தால் மனவேதனை அடைந்த அமுதா விட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து வெள்ளவேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மனஉளைச்சலில் காணப்பட்டார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்ட அணைக்கட்டு புலிமேடு அருகே கொல்லை மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன். இவரது மனைவி திவ்ய (வயது 21). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

    திவ்யா உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வந்தனர். இதனால் மனஉளைச்சலில் காணப்பட்டார். திவ்யா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அரியூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணவர் இறந்த நிலையில் மகளும் கடந்த மாதம் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதால் தாய் மன விரக்தியில் யாரிடமும் பேசாமல் இருந்தார்.
    • விரக்தியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் பூதிப்புரம் வாழையாத்துப்பட்டியை சேர்ந்த சின்னமுத்து மனைவி மீனா(49). இவர்களுக்கு முருகேஸ்வரி என்ற மகள் இருந்தார்.

    சின்னமுத்து உடல்நலக்குறைவால் இறந்துவிட்ட நிலையில் முருகேஸ்வரியை போஸ் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். முருகேஸ்வரி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் கடந்த மாதம் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    தனது கணவன் மற்றும் மகள் அடுத்தடுத்து இறந்ததால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த மீனா யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். சம்பவத்தன்று மீனா தனது வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது உறவினர் சுரேஷ் கொடுத்த புகாரின்பேரில் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கணவன், மனைவி தனித்தனியாக வசித்து வருகின்றனர்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    காட்பாடி அடுத்த கரிகிரி ஹாஸ்பிடல் பின்புறத்தை சேர்ந்தவர் சபியுல்லா. இவரது மனைவி ஷாகிதா.

    தம்பதியினருக்கு பிளஸ் 2 படிக்கும் 17 வயது மகன் உள்ளார். கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ஷாகிதாவின் மகனுக்கு நேற்று முன்தினம் பிறந்தநாள் என்பதால் அவர் புத்தாடை வாங்கித் தருமாறு தனது தாயிடம் கேட்டார்.

    தன்னிடம் பணம் இல்லாததால் புத்தாடை வாங்கி தர முடியாது என மகனிடம் ஷாகிதா கூறினார்.

    இதனால் தாய் மற்றும் மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் விரக்தி அடைந்த ஷாகிதா வீட்டில் உள்ள சீலிங் பேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த திருவலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஷாகிதாவின் விரைந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து அறிந்து சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் குவிந்தனர்.
    • சசிகலா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே வெட்டுக்காட்டுபுதூர் பகுதியை சேர்ந்தவர் தனசேகரன் (வயது 30). இவரது மனைவி சசிகலா (26). இவர்களுக்கு தீபித் (5), தர்ஷன் (3) என்ற 2 மகன்கள் இருந்தனர்.

    இந்நிலையில் கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவும் தம்பதி இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சசிகலா, மிகுந்த சோகத்தில் இரவு முழுவதும் அழுதபடி படுத்திருந்துள்ளார்.

    இந்த நிலையில், இன்று காலையில் கணவர் தனசேரன் தூங்கிக் கொண்டிருந்தபோது, சசிகலா தனது இரு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அவருக்கு சொந்தமான விவசாய கிணறு இருக்கும் இடத்திற்கு வந்தார்.

    பின்னர் 2 குழந்தைகளையும் கிணற்றில் தூக்கி வீசி கொலை செய்துவிட்டு, தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இந்நிலையில், சசிகலாவின் தந்தை கரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி, இன்று காலை சசிகலாவுக்கு போன் செய்துள்ளார். மகள் போனை எடுக்காததால் சந்தேகம் அடைந்த அவர், வெட்டுக்கட்டு புதூருக்கு விரைந்து வந்தார். சசிகலாவை வீட்டில் பார்க்க முடியவில்லை. குழந்தைகளையும் காணவில்லை.

    இதனால் மகள் மற்றும் பேரன்களை தேடி, பழனிச்சாமி விவசாய தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது, அங்குள்ள விவசாய கிணற்றில் 2 குழந்தைகளையும் வீசிவிட்டு, சசிகலாவும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இதையடுத்து, உடனடியாக அப்பகுதி இளைஞர்களை வரவழைத்து, கிணற்றில் இறங்கி 2 குழந்தைகள், சசிகலாவை தண்ணீருக்குள் இருந்து மீட்டு வெளியே எடுத்துவந்தனர். பின்னர் இதுகுறித்து நல்லூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில், நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் பெருமாள் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சசிகலா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து அறிந்து சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் அங்கு குவிந்தனர். மேலும் அவரது உறவினர்கள் கதறி அழுதது, பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    இதனிடையே சசிகலாவுக்கு திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால், நாமக்கல் மாவட்ட வழங்க அலுவலரும், திருச்செங்கோடு உதவி கலெக்டருமான (பொறுப்பு) ரமேஷ் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    • மனவளர்ச்சி குன்றி உடல் ரீதியாக மகள் கஷ்டப்பட்டு வருவதை கண்டு மனம் கலங்கிய சுலோச்சனா மகளை தீவைத்து எரித்து கொன்று விட்டு தானும் தற்கொலை செய்ய முடிவு செய்தார்.
    • மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பூந்தமல்லி:

    மாங்காடு அடுத்த கொளப்பாக்கத்தை சேர்ந்தவர் நடராஜன். கார்பெண்டர். இவரது மனைவி சுலோச்சனா (வயது48). இவரது மகள் மீனாட்சி(18). இவர் பிறந்தது முதல் மனவளர்ச்சி, உடல் வளர்ச்சி குன்றி இருந்தார். மகன் தினேஷ்.

    மனவளர்ச்சி குன்றிய மீனாட்சியை சுலோச்சனா மற்றும் அவரது கணவர் கவனித்து வந்தனர். மகள் மனவளர்ச்சி குன்றி கஷ்டப்பட்டு வந்ததால் பெற்றோர் மிகவும் மனவேதனை அடைந்தனர். இதுபற்றி அவர்கள் அடிக்கடி பேசி வருத்தப்பட்டனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்த சுலோச்சனாவின் கணவர் நடராஜன், மகன் தினேஷ் ஆகியோர் வெளியேசென்று இருந்தனர். வீட்டில் சுலோச்சனா, அவரது மகள் மீனாட்சி மட்டும் இருந்தனர்.

    ஏற்கனவே மனவளர்ச்சி குன்றி உடல் ரீதியாக மகள் கஷ்டப்பட்டு வருவதை கண்டு மனம் கலங்கிய சுலோச்சனா மகளை தீவைத்து எரித்து கொன்று விட்டு தானும் தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

    இதையடுத்து வீட்டில் இருந்த மண்எண்ணையை நடக்கப்போகும் விபரீதத்தை அறியாமல் இருந்த மகள் மீனாட்சி மீது ஊற்றி சுலோச்சனா தீவைத்தார். மேலும் அவர் தனது உடல் மீதும் மண்எண்ணையை ஊற்றி தீக்குளித்தார்.

    இதில் அவர்கள் 2 பேரும் தீயில் கருகி அலறி துடித்தனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது சுலோச்சனாவும் அவரது மகள் மீனாட்சியும் தீயில் கருகுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தீயை அணைத்து அவர்கள் 2 பேரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி சுலோச்சனா பரிதாபமாக இறந்தார். அவரது மகள் மீனாட்சிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது நிலைமையும் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

    மகளை சரிவர பராமரிக்க முடியாததால் சுலோச்சனா இந்த விபரீத முடிவை எடுத்து இருப்பது தெரியவந்து உள்ளது.

    மனவளர்ச்சி குன்றிய மகளை பராமரித்து வந்த தாயே மன உளைச்சலில் மகளை தீவைத்து எரித்து விட்டு தானும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாங்காடு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • லட்சுமி (50) கணவர் இறந்த நிலையில் கடந்த 25 ஆண்டுகளாக தனது ஒரே மகன் விஜய் என்பவருடன் தனது அண்ணன் சுப்ரமணியின் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
    • இந்நிலையில் கடந்த கடந்த வாரம் உடல்நிலை சரியில்லாமல் விஜய் இறந்துள்ளார்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகி லுள்ள சிக்கம்பட்டி கிராமம்.சின்னகாடம்பட்டி பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (50) கணவர் இறந்த நிலையில் கடந்த 25 ஆண்டுகளாக தனது ஒரே மகன் விஜய் என்பவருடன் தனது அண்ணன் சுப்ரமணியின் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த கடந்த வாரம் உடல்நிலை சரியில்லாமல் விஜய் இறந்துள்ளார். மகன் இறந்த வேதனையில் இருந்து மீளாத நிலையில் வேதனை யில் இருந்து வந்த லட்சுமி எலி மருந்தை சாப்பிட்டு மயங்கிய நிலையில் கிடந்த லட்சுமியை உறவினர்கள் மீட்டு சேலம் அரசு ஆஸபத் திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

    அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுபற்றி சுப்ரமணி கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • எதிர்ப்பையும் மீறி மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் நிர்மலா யாருடனும் பேசாமல் விரக்தியில் இருந்து வந்தார்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நிர்மலா பிணத்தை மீட்டு பிரத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் குகட் பள்ளியை சேர்ந்தவர் சீனிவாச ராவ். இவர் ஐதராபாத்தில் உள்ள அரசு அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி நிர்மலா (வயது 45). தம்பதிக்கு சைதேஜா என்ற மகனும், நிஹாரிகா என்ற மகளும் உள்ளனர்.

    நிஹாரிகா கல்லூரியில் படிக்கும் போது தன்னுடன் படிக்கும் ராஜ்குமார் என்பவரை காதலித்து வந்தார். நிஹாரிகாவின் காதல் விவகாரம் அவரது பெற்றோருக்கு தெரிய வந்தது.

    அவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த சில நாட்களுக்குகளுக்கு முன்பு நிஹாரிகா வீட்டை விட்டு வெளியேறி ராஜ்குமாருடன் திருமணம் செய்து கொண்டார்.

    எதிர்ப்பையும் மீறி மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் நிர்மலா யாருடனும் பேசாமல் விரக்தியில் இருந்து வந்தார். நேற்று காலை சீனிவாச ராவ் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார்.

    சைதேஜா வெளியே சென்று விட்டு மாலை மீண்டும் வீடு திரும்பினார். அப்போது படுக்கை அறை உள்பக்கமாக தாழிடப்பட்டு இருந்தது. நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காததால் சந்தேகம் அடைந்த சைதேஜா இது குறித்து தனது தந்தைக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார்.

    வீட்டிற்கு விரைந்து வந்த சீனிவாச ராவ் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அங்குள்ள மின்விசிறியில் நிர்மலா தூக்கில் பிணமாக தூங்கினார். இதுகுறித்து சீனிவாசராவ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நிர்மலா பிணத்தை மீட்டு பிரத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நிர்மலா எழுதி வைத்திருந்த கடிதத்தை பறிமுதல் செய்தனர்.

    அதில் எழுதி இருப்பதாக போலீசார் கூறியதாவது, தனது மகள் எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்து கொண்டதால் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்வதாகவும் தனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை என கடிதத்தில் எழுதி உள்ளார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாலகுமார், வேறு பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக தமிழ்ச்செல்விக்கு சந்தேகம் ஏற்பட்டது.
    • மனமுடைந்த தமிழ்ச்செல்வி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    நாமக்கல்:

    நாமக்கல் கொசவம்பட்டியை சேர்ந்தவர் பாலகுமார். இவரது மனைவி தமிழ்ச்செல்வி (வயசு 35). இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

    இந்த நிலையில் பாலகுமார், வேறு பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக தமிழ்ச்செல்விக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு மீண்டும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் மனமுடைந்த தமிழ்ச்செல்வி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். பின்னர் சம்பவம் குறித்து நாமக்கல் நகர போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கணவன்-மனைவி இடையே கடந்த சில மாதங்களாக குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.
    • சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

    சிவகிரி:

    தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே ஆத்துவழி பள்ளிக்கூட தெருவை சேர்ந்த முருகன்(வயது 32). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கல்குவாரியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    இவரும், மதுரை பழங்காநத்தம் பகுதியை சேர்ந்த மீனா(27) என்பவரும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தியா முமீனாள்(6), முகிஷா முமீனாள்(2) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.

    கணவன்-மனைவி இடையே கடந்த சில மாதங்களாக குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. நேற்றிரவு அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனே முருகன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். சிறிது நேரம் கழித்து அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது அங்கு மீனாவையும், 2 குழந்தைகளையும் காணவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த முருகன் அக்கம் பக்கத்தில் உள்ள உறவினர் வீடுகளில் சென்று தேடிப்பார்த்தார். ஆனால் அவரை காணவில்லை. அவரது வீட்டுக்கு சற்று தொலைவில் உள்ள ஒருவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் தேடிப்பார்த்தார். அப்போது அவரது மூத்த மகள் தியா கிணற்றில் பிணமாக மிதந்து கொண்டிருந்தார்.

    இதுகுறித்து வாசுதேவநல்லூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு துறையினரும் விரைந்து சென்று மிதந்து கொண்டிருந்த தியா உடலை மீட்டு புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கிணற்றில் தேடியபோது அதில் இருந்து மீனாவும், 2-வது மகளான முகிஷாவும் பிணமாக மீட்கப்பட்டனர்.

    இதுதொடர்பாக கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், குடும்ப தகராறில் மீனா தனது 2 குழந்தைகளையும் கிணற்றில் வீசி கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனமுடைந்த கிருஷ்ணா வீட்டில் சமையல் அறையில் தனது துப்பட்டாவால் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
    • அதனை தொடர்ந்து சதீஷ்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் நம்பியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    நம்பியூர்:

    நம்பியூர் அருகே உள்ள கோட்டு புள்ளம்பாளையம், காமராஜர் நகர் பகுதியில் வசித்து வருபவர் சதீஷ்குமார். இவர் சொந்த ஊர் ராஜஸ்தான் மாநிலம், நாடோடி காரளி ஆகும். இவருக்கு திருமணமாகி கிருஷ்ணா (27) என்ற மனைவியும், தனுஷா (6) ஹரிஷா (4) அபி (2) என 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    சதீஷ்குமார் கோட்டு புள்ளாம்பாளையம் பகுதியில் தங்கி கட்டிடங்களுக்கு டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சதீஷ்குமாரின் மனைவி கிருஷ்ணாவிற்கு தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது. அதனால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று கிருஷ்ணா சிகிச்சை பெற்று வந்தார்.

    இதனால் மனமுடைந்த கிருஷ்ணா கணவர் சதீஷ்குமார் வேலைக்கு சென்ற நேரத்தில் வீட்டில் சமையல் அறையில் உள்பக்கம் தாழிட்டு தனது துப்பட்டாவால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

    இந்நிலையில் மதிய உணவிற்கு வந்த சதீஷ்குமார் சமையலறை உள்பக்கம் தாழிட்டதை கண்டு உடனடியாக அவரது வேலை செய்யும் மேஸ்திரி நாகராஜ் என்பவருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

    பின்னர் 2 பேரும் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது கிருஷ்ணா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. உடனடியாக அவரை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கிருஷ்ணாவை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறினர்.

    அதனை தொடர்ந்து சதீஷ்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் நம்பியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • ஒரே மகன் விபத்தில் இறந்ததால் சஞ்சீவ் சங்கர் மற்றும் நந்தினி ஆகியோர் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டனர்.
    • வீட்டில் இருந்த சஞ்சீவ்சங்கர், நந்தினி ஆகியோர் பூச்சி மருந்தை குடித்தனர்.

    வடவள்ளி:

    கோவை வடவள்ளி அருகே உள்ள நவாவூர் கணுவாய் ரோட்டை சேர்ந்தவர் சஞ்சீவ் சங்கர் (வயது 46). தொழில் அதிபர். இவரது மனைவி நந்தினி (45).

    இவர்களது ஒரே மகன் ரவி கிருஷ்ணா (22). கல்லூரி மாணவரான இவர் தனது நண்பர்களுடன் பேரூர் அருகே உள்ள ரிசார்ட்டுக்கு ஓணம் பண்டிகை கொண்டாட சென்றார். பின்னர் மறுநாள் காலையில் நண்பர்களுடன் ஒரு காரில் வீட்டிற்கு திரும்பினார். கார் தென்னமநல்லூர் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து கிணற்றுக்குள் பாய்ந்தது. இதில் ரவி கிருஷ்ணன் உள்பட 3 பேர் இறந்தனர்.

    இந்தநிலையில் தங்களது ஒரே மகன் விபத்தில் இறந்ததால் சஞ்சீவ் சங்கர் மற்றும் நந்தினி ஆகியோர் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டனர். அவர்களுக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆறுதல் கூறி வந்தனர். மகன் இறந்த துக்கம் தாங்க முடியாத நிலையில் இருந்த கணவன்-மனைவி இருவரும் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர்கள் தற்கொலை செய்வது என முடிவு செய்தனர்.

    அதன்படி நேற்று முன்தினம் வீட்டில் இருந்த சஞ்சீவ்சங்கர், நந்தினி ஆகியோர் பூச்சி மருந்தை குடித்தனர். சிறிது நேரத்தில் மயங்கினர். நந்தினியின் அண்ணன் அவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். ஆனால் போனை யாரும் எடுக்கவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த அவர் உடனடியாக நந்தினியின் வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டில் தனது தங்கை மற்றும் அவரது கணவர் சஞ்சீவ் சங்கர் ஆகியோர் விஷம் குடித்த நிலையில் வாயில் நுரை தள்ளியபடி உயிருக்கு போராடிக்கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு கணவன்-மனைவி இருவரையும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.

    ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நள்ளிரவு 12.45 மணியளவில் நந்தினி பரிதாபமாக இறந்தார். சங்சீவ் சங்கர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×